Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

உதட்டு வறட்சி முதல் பாத வெடிப்பு வரை அனைத்தையும் சரி செய்திட இந்த ஒரு பழம் போதும்...

A
Admin User
Journalist
May 19, 2022 1 min read 32 views
உதட்டு வறட்சி முதல் பாத வெடிப்பு வரை அனைத்தையும் சரி செய்திட இந்த ஒரு பழம் போதும்...

கோடைகால பழங்களில் முலாம்பழமும் ஒன்று. முலாம்பழம், நீர் பழம் என்பதால் அதை கோடைகாலத்தில் சாப்பிடும் போது உடல் நீரேற்றத்துடன் இருக்கும். கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய உடல் வறட்சியைத் தடுக்க முலாம்பழத்தைச் சாப்பிடலாம். அதுவே, கோடை வெயிலில் வறட்சி அடையும் சருமத்தை எப்படி பாதுகாப்பது? அதற்கும் முலாம்பழத்தையே தாராளமாக பயன்படுத்தலாம். ஏனெனில், முலாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான ஊட்டச்சத்துகள் பல உள்ளன. இதுதவிர, சரும அழகைப் பாதுகாக்க உதவும் அனைத்து காரணிகளும் முலாம்பழத்தில் உள்ளன. அதிலும், கோடைகாலத்தில் முலாம்பழம் குறைவான விலையில் அதிகம் கிடைப்பதால் அதை சாப்பிடுவதோடு, சரும அழகு பராமரிப்பிற்கும் அதிகம் பயன்படுத்தலாம் இப்போது சருமத்தை பாதுகாக்க முலாம்பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தால் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

க்ளென்சர்

கோடைகாலத்தில் உடலின் அதிகப்படியான வெப்பம் மற்றும் வைட்டமின் சி குறைபாடு இருந்தால், சருமத்தில் கருமை வரத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், முலாம்பழம் மூலம் அதனை ஈடுசெய்யலாம். முலாம்பழத்தை ஒரு க்ளென்சராக பயன்படுத்தவும். இதற்கு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் முலாம்பழத்தின் உட்பகுதியை மட்டும் எடுத்து நன்கு மசித்து கொள்ளவும். இப்போது அதை உங்கள் முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்து வர முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் ஜொலிக்கும்.

ஃபேஸ் டோனர்

முலாம்பழம் மற்றும் ரோஸ் வாட்டரில் செய்யப்பட்ட டோனரை உங்கள் அன்றாட சருமப் பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு முலாம்பழத்தின் சாறு மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் இரண்டையும் சேர்த்து கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும். இந்த டோனரை இரவி தூங்குவதற்கு முன்பு உங்கள் சருமத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளவும். இது உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து எப்போதும் ப்ரஷாக வைத்திருக்கும்.

லிப் ஸ்க்ரப்

உதடுகளின் அழகை மெருகேற்ற முலாம்பழம் நன்கு உதவக்கூடியது. இதற்கு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் முலாம்பழத்தை மசித்து, அதனுடன் சிறிது கிளிசரின் சேர்த்து உதடுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து பின்னர், ஒரு சுத்தமான துணியால் உதடுகளை சுத்தம் செய்யவும். இப்படி செய்து வர உதடுகள் இயற்கையான சிவப்பு நிறத்தைப் பெற்று, வறட்சி அடையாமல் இருக்கும்.

பாத வெடிப்பு

பலரும் பாத வெடிப்புகளால் அவதியுறுகிறார்கள். நாம் என்ன தான் அழகாக இருந்தாலும், பாதங்களில் இருக்கும் வெடிப்புகள் நம் மொத்த அழகை கெடுக்கும் விதமாக இருக்கும். எனவே, அதை செய்திட வெடிப்புள்ள கணுக்கால்களை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற முலாம்பழங்களைப் பயன்படுத்தலாம். அதற்கு முலாம்பழத்தை மசித்து, அதனுடன் அரைத்த ஓட்ஸ் பொடியைச் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது அந்த கலவையை குதிகால்களில் வெடிப்புள்ள பகுதிகளில் தடவி கைகளால் லேசாக தேய்த்து மசாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, பாத வெடிப்பு மறைந்து, கால் மிருதுவானதாக மாறிடும்.

DOCTOR EXTRA SOFT Men's Classic Casual Sports Clogs/Sandals with Adjustable Back Strap for Adult | Comfortable & LightWeight| Stylish & Anti-Skid|Waterproof & Everyday Use Mules for Gents & Boys D-513
Recommended for You
DOCTOR EXTRA SOFT Men's Classic Casual Sports Clogs/Sandals with Adjustable Back Strap for Adult | Comfortable & LightWeight| Stylish & Anti-Skid|Waterproof & Everyday Use Mules for Gents & Boys D-513

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,556
தங்கம் (24k)
1 கிராம்
₹15,879
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க